தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனம்...சொல்ல முடியாத அளவுக்கு சிவகார்த்திகேயன் இமானுக்கு செய்த துரோகம்
தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டு இருப்பது தான் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இமான், என் படத்துல தான் சிவகார்த்திகேயன்பாடகராக அறிமுகமானார். ஆனால் இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் வேண்டும் என்றால் அவர் பாட்டுக்கு இசையமைக்கலாம்.
அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்லக்கூட முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
தற்போது இமானின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியதாவது, காலம் முழுக்க சிவகார்த்திகேயன் டி இமானுக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறார். ஆனால் அந்த நன்றியை மறந்து சிவகார்த்திகேயன் இமானுக்கு மிக பெரிய துரோகம் ஒன்று செய்தார். அதை நம்மால் வெளிய சொல்ல முடியாது. இமானால் கூட அதை வெளியே சொல்ல முடியாது என்று பிஸ்மி சில மாதங்களுக்கு முன்பே கூறி இருந்தார்.
தற்போது பிஸ்மி தனது சோசியல் மீடியா பக்கத்தில், "உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறுஎதுவுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறுஎதுவுமில்லை
— Valaipechu J Bismi (@jbismi_offl) October 17, 2023
டி.இமான் என்ன சொல்ல வர்றாருன்னு புரியுதா?
— ValaiPechu Anthanan (@Anthanan_Offl) October 16, 2023
வலைப்பேச்சு-இந்த விஷயத்தை பலமுறை நாசுக்கா சொல்லியிருக்கு. இன்று அதையே தன் வாயால் உறுதி படுத்துகிறார் இமான்.
சில ஹீரோக்கள் நிஜ வாழ்வில் அக்மார்க் வில்லன்கள். அவ்வளவே!https://t.co/sl27GUApMZ