திரைப்படங்களில் நடிப்பதற்காக குடும்பத்தை பிரித்த ஜோதிகா.. மனா உளைச்சலில் சிவகுமார்
1999 -ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஜோதிகா.
இதையடுத்து பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
2015 -ம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். தற்போது ஜோதிகா திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சூர்யாவின் தந்தை சிவகுமார், திருமணத்திற்கு பின்பு நடிக்க கூடாது என்று ஜோதிகாவிடம் கூறியுள்ளார். ஆனால் ஜோதிகா மாமனார் பேச்சை கேட்காமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனால் சிவகுமாருக்கு கோபம் ஏற்பட்டதாம்.
மேலும் சூர்யா மும்பையில் குடியேறியதால் சிவகுமாருக்கு மன உளைச்சல் அடைந்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.