எம்ஜிஆர் கொடுத்த சாபம் தான் இதுக்கு காரணம்!! சிவக்குமார் ஓபன் டாக்..

MGR Sivakumar M G Ramachandran Actors Tamil Actors
By Jai Apr 28, 2026 03:15 PM GMT
Report

சிவக்குமார்

வயது கூடினாலும் உடலும் மனதும் இளமையாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் நடிகர் சிவக்குமார். 80 வயதை கடந்தும் இன்னும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட்டு வரும் சிவக்குமார், தான் இப்படி இருக்க உணவுமுறைதான் முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார்.

காலையில் தினமும் பழைய சாதம், இரண்டு டம்ளர் மோர், அதோடு பப்பாளி, கொய்யாப்பழம் சாப்பிடுகிறேன். உடலை குளிர்ச்சியாகவும், லேசாகவும் வைத்திருக்க அது உதவும். அதிகம் சாப்பிட வேண்டாம், சரியானதை சாப்பிடணும்.

எம்ஜிஆர் கொடுத்த சாபம் தான் இதுக்கு காரணம்!! சிவக்குமார் ஓபன் டாக்.. | Sivakumar Simple Lifestyle Keeps Him Youthful

சீக்கிரம் சாப்பிடுவது, நேரத்திற்கு சாப்பிடுவது உடலை எப்போது சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவக்குமார், பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

எம்ஜிஆர் கொடுத்த சாபம்

1979ல் தன்னுடைய 100வது படத்தின் போது எம் ஜி ஆர் என்னை பார்த்து, இந்த சிவக்குமார் வாழும் காலம் முழுவதும் இளமையோடு இருப்பார் என்று கூறி சாபம் கொடுத்தார் என தெரிவித்தார். அதை சிரித்தபடி பகிர்ந்தவர், இப்போது எனக்கு 80க்கும் மேல் வயசு, பார்த்த வயசான மாதிரி தெரியுதா? என்று கேட்டுள்ளார்.