சிவக்குமார் பேச்சால் ட்ரோல் மெட்டீரியலான சூர்யா!! கலாய்த்து தள்ளும் ப்ளூ சட்டை..
சிவக்குமார் - சூர்யா
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே 1 ஆம்தேதி உலகெங்கும் ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டான நிலையில், ரெட்ரோ படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்த நடிகர்கள் இங்கு யார் இருக்கிறார்கள்? என் மகன் தான் முதன்முதலில் அதை செய்தான் என்று கூறியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன்
தற்போது அவரின் பேச்சுதான் ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது. அவருக்கு முன் நடிகர் அர்ஜுன் சிக்ஸ்பேக் வைத்தவர் என்றும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து தள்ளி வருகிறார். மேலும் பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் முன்பே செய்துவிட்டார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன்பாகவும், அதன் பிறகும் யாரும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்களா? - சிவகுமார். pic.twitter.com/vJJtm67JAB
— Blue Sattai Maran (@tamiltalkies) April 19, 2025
