தேசிய விருது படத்துக்கு வந்த சோதனை.. இசைஞானியையே மறந்த தமிழ் சினிமா ரசிகர்கள்..
இந்தியளவில் கவுரவிக்கப்படும் விருதாக தேசிய திரைப்பட விருது பட்டியல் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. சினிமா ஷூட்டிங்கிற்கு ஏற்ற இடமாக மத்தியபிரதேச மாநிலத்தை தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் 5 தேசிய விருதினை சூரரை போற்று படம் தட்டிச்சென்றது என்பதை கொண்டாடி வரும் தமிழ் சினிமா ரசிகர்கள் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்திற்கு தேசிய விருதினை பெற்றதை அறிந்து எப்போது இந்த படம் வந்தது என்று ஷாக்காகி கேட்டு வருகிறார்கள்.
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியானது இப்படம். 3 பெண்களின் கதையை மையப்படுத்தி ஆந்தாலஜி ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியொரு படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பது மிகப்பெரிய சிறப்பாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்காக, சிறந்த தமிழ் படத்திற்காகவும், எடிட்டிங்கிற்காக ஸ்ரீகர் பிரசாத்-க்கும், சிறந்த துணை நடிகைக்காக நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
இப்படி மக்களால் அறியபடாத படமாக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் இருந்துள்ளது. தற்போது இப்படத்தினை பார்க்க வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

