அப்போ வடிவேலு இப்போ எஸ் ஜே சூர்யாவா? தயாரிப்பாளரால் டீக்கடை விற்கவும் தயாராகும் SJ சூர்யா

Vadivelu S.J.Suryah
By Edward May 27, 2022 04:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் அறிமுகப்படுத்தி வைத்த இயக்குனரில் ஒருவர் எஸ் ஜே சூர்யா. வாளி படத்தில் அஜித்தை வைத்து இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்து சூப்பர் ஹிட்டும் கொடுத்தார் எஸ்ஜே சூர்யா. இப்படத்தினை அடுத்து நடிகர் விஜய்யின் குஷி படத்தை இயக்கியும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

இரு முன்னணி நடிகர்களை வைத்து இரு படங்கள் மட்டுமே தமிழில் எடுத்த அவர் அதன்பின் நடிப்பில் ஆர்வம் காட்ட நடித்த படங்கள் எல்லாம் ஓரளவிற்கு தான் வெற்றி கண்டது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து வில்லன் கதாபாத்திரத்தினை தேர்வு செய்து தற்போது முன்னணி இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், இயக்குனராக இருந்த சமயத்தில் எஸ்ஜே சூர்யாவிடம் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கலாம் என்று கூறி கையில் ` கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நடிப்பில் ஆர்வம் செலுத்தியதால் இனி படங்களை இயக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று அந்த ஒரு கோடியை திரும்ப கொடுத்துள்ளார்.

ஆனால் தயாரிப்பாளரோ பணத்தை வையுங்கள் தேவைப்படும் போது நான் வாங்கிக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். பல வருடமாகி தற்போது மார்க்கெட் உச்சியில் இருக்கும் எஸ்ஜே சூர்யாவிடம் அந்த தயாரிப்பாளர் சென்றுள்ளார். அந்த தயாரிப்பாளர் எஸ்ஜே சூர்யாவிடம் ஒரு கோடி பணத்தை எல்லாம் வட்டியுடன் கேட்டுள்ளார்.

ஆனால் எஸ்ஜே சூர்யாவோ ஒரு கோடிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இந்த விஷயம் பலரது பக்கம் திரும்ப எஸ்ஜே சூர்யாவுக்கு ஆதரவாக யாரும் பேச முன் வரவில்லையாம்.

இதனால் எஸ்ஜே சூர்யாவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு சினிமாவில் இருந்து ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத எஸ்ஜே சூர்யா எனக்கு நடப்பே வேண்டாம் என்று டீக்கடை வெச்சாவது பிழைத்துக்கொள்வேன் என்று அடித்து கூறி சவால் விட்டுள்ளாராம்.

இந்த விஷயம் கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தான் நடிகர் வடிவேலுவுக்கும் அவமானம் ஏற்பட்டு சினிமாவில் இருந்து ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.