கிட்னியை பறிகொடுத்துடாதீங்க!! நானியை வடிவேலு காமெடியா கலாய்த்த எஸ்ஜே சூர்யா...
சூர்யாஸ் சாட்டர்டே
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது தெலுங்கு சினிமாவில் வில்லனாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா. வரிசையாக பல படங்களில் நடித்து வரும் எஸ் ஜே சூர்யா, நானி, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள 'சூர்யாஸ் சாட்டர்டே' படத்தில் வில்லன் ரோலில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி வரும் எஸ் ஜே சூர்யா, வடிவேலு காமெடியை வைத்து நானியை கலாய்த்திருக்கிறார். நானியையும் பிரியங்காவையும் பாட்டுப்பாட சொல்லி தொகுப்பாளினி கேட்க, உடனே எஸ் ஜே சூர்யா, இதுபோல் தூக்கத்துல இருந்தவன் என்னைய பாட சொன்னாங்க, அதனால் ரொம்ப உசுராகிட்டேன், நல்ல பேரை எடுத்துட்டு இருந்தேன், வெச்சு செஞ்சிட்டாங்க சார் என்று கூறியிருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா வடிவேலு காமெடி
மேலும், வடிவேலு காமெடி ஒன்று இருக்கும். வேனில் ஏறாதுன்னு ஒருத்தன் சொல்லுவான், டேய் வாடா பாக்கலாம் என்று சொல்லியும் வேனில் வடிவேலு ஏறுவார். அப்போது வேனில் ஏறி கிட்னியை எடுத்துடுவாங்க. அதுபோல தான் சார், இப்படி உசுப்பேற்றுவார்கள், இதற்கு யோசித்து கிட்னியை இழந்துடாதீர்கள்.
கிட்னியை பறிகொடுத்தவன் நான் சொல்றேன், கிட்னியை இழந்துடாதீங்க சார், தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாரான நானியை மரியாதையாக கூட்டி வந்து மரியாதையாக அனுப்பி வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதுல ஏதும் பிரச்சனை பண்ணிடாதீங்க என்று காமெடியாக தொகுப்பாளினியிடம் கூறியிருக்கிறார். இதற்கு பிரியங்கா மோகனும் நானியும் வாய்விட்டு சிரித்துள்ளனர்.