பிரபல நடிகரை பொது இடத்தில் செருப்பால் அடித்த ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ..

Gossip Today Puneeth Rajkumar
By Edward Dec 20, 2022 08:56 AM GMT
Report

கன்னட சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தர்ஷன். சமீபத்தில் தர்ஷன் நடிப்பில் க்ராந்தி என்ற கன்னட படம் 2023 ஜனவரி 26 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் ரவி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஒரு நிகழ்ச்சியில் பொது இடம் என்றும் பார்க்காமல் ரசிகர்கள் ஒருவர் தர்ஷன் மீது செருப்பை தூக்கி வீசி அடித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்றும் யார் அவர் மீது செருப்பை தூக்கி அடித்தது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சிக்கும் ஊடகத்தினரை கடுமையான எதிர்ப்பை காட்டி வருகிறார் தர்ஷன்.

அப்படி ஒருமுறை "அதிர்ஷ்ட தேவி கதவை தட்டினால் அவளை பிடித்து உங்கள் படுக்கையில் இழுத்து ஆடையை கலைந்து விடுங்கள். நீங்கள் ஆடையை திரும்ப தரும் போது தான் வெளியே செல்லுவாள்" என்று ஆபாசமாக பேசியிருந்தார்.

மேலும் அவர் மீது செருப்பை தூக்கி அடித்தது மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ரசிகர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பலர் தர்ஷனுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.