விவாகரத்து ரூமருக்கு முடிவு கட்டிய பிரசன்னா!! 11 வருஷமாகியும் குறையாத ரொமான்ஸ் செய்யும் நடிகை சினேகா..
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து இன்றுவரை சிறந்த தம்பதிகளாக ஜொலித்து வருபவர்கள் நடிகர் பிரசன்னா - நடிகை சினேகா. கடந்த 2012ல் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா.
திருமணமாகி சினிமாவில் இருந்து சில காலம் விலகி இரு குழந்தைகளை பெற்றெடுத்தார் சினேகா. அதன்பின் பிள்ளைகள் வளர்ந்தப்பின் நடிக்க ஆரம்பித்துள்ள சினேகா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னாவை விவாகரத்து செய்யவுள்ளதாக சினேகா பற்றி செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று கூறும் விதமாக கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது சினேகாவை திருமணம் செய்து 11 ஆண்டுகளாகிய நிலையில் சினேகாவுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்து.
11 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதத்தில் சினேகாவுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.