கிரிவல பாதியில் செருப்பு.. அய்யோ பெரும்பாவம் பண்ணிட்டாங்க.. சர்ச்சையில் சிக்கிய சினேகா - பிரசன்னா..
சினேகா - பிரசன்னா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் இளசுகளின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து இரு குழந்தைகளுக்கு தாயானார்.
அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்திய சினேகா, கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து நடித்தார். அண்மையில் நடிகை சினேகா, தன் கணவர் பிரசன்னாவுடன் பன்குனி பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணமலை அண்ணாமலையர் கோயிலுக்கு சென்றுள்ளனர்.
கிரிவல பாதியில் செருப்பு
அப்போது கிரிவலபாதியில் நடைபயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கிரிவல பாதையில் செருப்பு அணிந்து சினேகா, பிரசன்னா சென்றது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கிரிவல பாதையில் பக்தர்கள், அண்ணாமலையார் மீதுள்ள பக்தியின் பொருட்டு செருப்பில்லாமல் கடப்பது வழக்கம். ஆனால் இவர்கள் செருப்பு அணிந்து சென்றது பேசுபொருளாக தற்போது மாறியுள்ளது.