நடிகை சினேகாவுக்கு என்ன ஆச்சு? மேடையில் கதறி அழ வைத்த தொலைக்காட்சி..

television sneha tamilactress punnagaiarasi JuniorSuperStar
By Edward Apr 09, 2022 07:11 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. என்னவளே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

சினிமாவில் காலெடி எடுத்து வைத்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து வருகிறார். கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தைகளுக்கு தாயாகினார். குடும்பத்தினை பார்த்துக்கொண்டும் கணவருடன் இணைந்து விளம்பர படங்களிலும் நடித்தும் வந்தார். தற்போது மீண்டும் உடல் எடையை கட்டுக்கோப்பான இன்னும் அந்த இளமையுடன் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார்.

குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சினேகா தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4-கிற்கு நடுவராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் ஒரு பிரமோ வீடியோவை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. யாரையோ பார்த்து சினேகா அழுவது போன்ற காட்சி தான் அது. கதறி அழும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் டிஆர்பிக்காக இப்படியா ஓவரா பண்றீங்களே சினேகா என்று கலாய்த்து வருகிறார்கள்.