விஜய்-ஆ!! தெரித்து ஓடிய சிம்ரன் ஜோதிகா!! 20 வருடம் கழித்து வலையில் சிக்கிய நடிகை சினேகா..
நடிகர் விஜய் லியோ படத்தின் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அடுத்த படமான தளபதி 68 படத்திற்கான அடிதளத்தை போட்டுள்ளார். லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் மூன்று வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளதால் அமெரிக்காவிற்கு சென்று அங்கு 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய லுக் டெஸ்ட்டை எடுத்துள்ளார். இப்படத்தில் விஜய், அப்பா, மகன் என்ற ரோலில் நடிக்கவுள்ளதால் அப்பாவுக்கு நடிகை ஜோதிகாவும், மகனுக்கு நடிகை பிரியங்கா அருள் மோகனும் நடிக்கவுள்ளார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் ஜோதிகா சில காரணங்களால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஏற்கனவே மெர்சல் படத்தில் நித்யா மேனன் ரோலில் நடிக்க கமிட்டாகி அதன்பின் வெளியேறிவிட்டார். அவரை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்த அவரும் நோ என்று கூறிவிட்டாராம்.
ஒரு வழியாக நடிகை சினேகாவிடம் பேசி கமிட் செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 20 வருடம் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா திருமணமாகி குழந்தை பெற்றப்பின் ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.