உடல் எடையை குறைத்தது அதற்காக இல்லையா! என்ன சினேகா இதெல்லாம்..

sneha
By Edward Dec 16, 2021 10:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கனவுக்கன்னியாக இருந்து தன் சிரிப்பால் இளைஞர்களை ஈர்த்து வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என்ற பட்டை பெயர் கொண்டு சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரு குழந்தைகளுக்கு தாயான சினேகா உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கதாநாயகி ரோலுக்காக இப்படி உடல் எடையை குறைக்கிறார் என்று பார்த்தால் பிரபல தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 4 சீசனுக்கு நடுவராக பணியாற்றவுள்ளார்.

ஆர்ஜே செந்தில், பிக்பாஸ் சக்யுக்தா போன்றவர்கள் நடுவர்களாக அவருடன் பணியாற்ற இருக்கிறார்கள். மேலும் சமீபத்தில் அவர் வெளியிட்ட மாடலிங் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.