படப்பிடிப்பு தளத்தில் நடிகை சினேகா செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை சினேகா. மலையாள நடிகையாக அறிமுகமானாலும் என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட சில படங்கள் நடிகை என்ற அந்தஷ்த்தை காட்டியது.

இதையடுத்து, சூர்யா, ஸ்ரீகாந்த், பிரசாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட அந்த கால முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். நடிகர் கமல் ஹாசனுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ், விஜய்யின் வசீகரா படத்தில் பாப்பு கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய இடத்தினை கொடுத்தது.

இதையடுத்து 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் இடைவெளிவிட்டு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சக பணியாளர்களுடன் கிரிக்கெட் விளையாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்புகைப்படம் சென்னை 28 படக்குழுவினருடன் எடுத்துகொண்டுள்ளார். அவருடன் கணவர் பிரசன்னாவும் இருந்துள்ளார். தற்போது புகைப்படம் வைரலாகியுள்ளது.

Gallery Gallery Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்