தெலுங்கு நடிகருடன் ரொமான்ஸ்!! விவாகரத்து சர்ச்சைக்கிடையில் சினேகா வெளியிட்ட வீடியோ..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கான்னியாக இருந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசியாக தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை சினேகா முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
அதன்பின் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தை பெற்றெடுத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறினார்.

அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றியும் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்தும் வந்தார். சமீபத்தில் 10 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரசன்னாவை விவாகரத்து செய்து பிரியவுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதெல்லாம் பொய் என்று கூறும் அளவிற்கு கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது கன்னட நடிகரும் நடன இயக்குனருமான சந்தீப் என்பவருடன் கன்னட பாடலுக்கு ரொமான்ஸ் ஆட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சினேகா அவருடன் நடனமாடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.