சினேகா அக்காவிடம் பொது இடத்தில் அஜித் நடந்துக்கொண்டது.. பல நாள் கழித்து வந்த விஷயம்
Ajith Kumar
Sneha
By Tony
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு உச்ச நடிகர். இவரின் துணிவு படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. படமும் 220 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சினேலாவின் அக்கா ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.
அதில் அஜித்தை நான் ஜனா படத்தில் சந்தித்தேன், அப்போது என் மகன் குழந்தை, அவ்வளவு நன்றாக எங்களை பார்த்துக்கொண்டார்.
அதை தொடர்ந்து 10 வருடம் கழித்து அவரை மால் ஒன்றில் பார்த்தேன். நான் பெரிய நடிகர் எதற்கு தொந்தரவு செய்ய வேண்டும் என்று ஒதுங்கினேன்.
ஆனால், அவர் என்னிடம் வந்த என் குடும்பத்தை விசாரிக்க, எனக்கு பெரும் தர்ம சங்கடமானது, அஜித் எதையும் மறக்கவில்லை, ஜெண்டில்மேன் அவர் என கூறியுள்ளார்.