சினேகாவின் வாழ்க்கையில் முதல் ஹீரோ பிரசன்னா கிடையாதா? உண்மையை உடைத்த புன்னகை அரசி
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் கனவுக்கன்னியாக 90ஸ் காலகட்டத்தில் கொடுக்கட்டி பறந்த நடிகை சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த ஆண்டில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார் சினேகா. அதன்பின் அடுத்தாண்டே சிறப்பு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரசாந்தின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
அதற்கு பிரபல தனியார் இணையதளம் நடத்திய பேட்டியொன்றில் பிரசாந்துடன் சினேகா கலந்து கொண்டு பிரசாந்த் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் என்னுடைய முதல் ஹீரோ யார் என்றால் அது பிரசாந்த் தான்.
அவர் படங்கள் நடிக்கும் போது புது நடிகை என்றும் பாராமல் சகஜமாக பேசினார். அப்படிபட்ட நடிகர் படத்தில் அறிமுகமாகியது என் வாழ்க்கையில் நல்ல ஒரு அனுபவம் என்று கூறியுள்ளார் சினேகா.