ஒரே குடும்பத்தில் இத்தனை சினிமா பிரபலங்கள்!! விஜய்யின் மச்சானின் தற்போதைய நிலை..
விஜய் குடும்பம்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், ஜனநாயகன் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு கவனம் செலுத்தவுள்ளார்.
விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு இயக்குநராகவும் தாய் ஷோபா பாடகியாகவும் திகழ்ந்தனர். இவர்கள் மட்டுமில்லாமல் விஜய்யின் சினிமா பின்புலம் நிறைய இருக்கிறதாம். விஜய்யின் தாய் வழி குடும்பத்தை சேர்ந்த அனைவருமே சினிமா பின்னணி கொண்டவர்கள் தானாம்.
விக்ராந்த் நடிகர் என்பதை தாண்டி விஜய்யின் தம்பின் என்று அனைவரும் அறிந்தது. ஆனால் இவர்களை தாண்டி விஜய்யின் குடும்பத்தை சேர்ந்த இன்னும் சிலர் தமிழ் சினிமாவில் பணியாற்றியிருக்கிறார்கள்.
சினிமா பிரபலங்கள்
விஜய்யின் தாய் வழி தாத்தா நீலகண்டன், விஜயவாஹினி ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தியதோடு, லைட் மியூசிக் மற்றும் நாடக கம்பெனி நடத்தி வந்துள்ளார். விஜய்யின் பாட்டி, அதாவது நீலகண்டனின் மனைவி ஒரு இசைக்கலைஞர். இவர்களுக்கு 4 பிள்ளைகள்.
இதில் மூத்தவர் தான் விஜய்யின் தாய் ஷோபா. அவருக்கு அடுத்து ஷீலா, ஒரு பின்னணி பாடகி, அதோடு நடிகையும் கூட. பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். ஷீலாவின் இளைய மகன் தான் விக்ராந்த். மூத்த மகன் பெயர் சஞ்சீவ், இவரும் இயக்குநர். விக்ராந்த் நடித்த தாக்க தாக்க திரைப்படத்தை இவர் தான் இயக்கினார்.
நீலகண்டன் - லலிதா தம்பதிக்கு ஷோபா மற்றும் ஷீலாவிற்கு பின் இரு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். விஜய்யின் தாய் மாமன்களான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இருவரும் சகோதரிகளை போல் சினிமாப்பாடகர்கள் தான். இதில் எஸ் என் சுரேந்தர் நடிகராகவும் இருக்கிறார்.
அவரின் மகன் தான் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் சிறுவயது அம்பியாக நடித்த விராஜ். அப்படியென்றால் விஜய்யின் மச்சான் முறை வரும் விராஜின் உண்மையான பெயர் ஹரிபிரஷாந்த்.
விராஜ் சிறுவயதில் நடித்து பிரபலமாகி சென்னை 28 படத்திலும் சென்னை 28 1வது பாகத்திலும் நடித்திருப்பார். விராஜின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.