ஊட்டியில் இருக்கும் அப்பாவிடம் இந்த கேள்வியை கேட்டாரா மகன் யாத்ரா? ஆடிப்போன தனுஷ்
திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்கள் வாழ்க்கையில் தனித்து வாழப்போகிறோம் என்று கூறி விவாகரத்து செய்தியை தெரிவித்திருந்தனர்.
காதலித்து திருமணம் செய்து இரு ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் எப்படி இந்த முடிவை எடுக்க முடிந்தது என்று தனுஷிடமும் ஐஸ்வர்யாவிடமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை கூறி சமாதானத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பேச்சை கேட்காமல் தனுஷ் படப்பிடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் ஊட்டியில் தன் மூத்த மகன் யாத்ரா ராஜவுடன் நேரத்தை செலவிட்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அப்போது யாத்ரா தன் தந்தையிடன் சில விஷயங்களை கூறியுள்ளாராம்.
அம்மாவிடம் எப்போது சேரப்போகிறீர்கள் என்றும் இப்படி இருந்தால் என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் எங்களை கேட்டால் என்ன பதில் கூறுவது என்று கேட்டுள்ளாராம்.
இந்த கேள்விகளால் தனுஷ் அதிர்ச்சியடைந்து என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பேசி கிசுகிசுக்க்ப்பட்டு வருகிறது.