47 வயதான நடிகை சோனாலி பிந்த்ரேவா இது? கேன்சருக்கு பின் இப்படியொரு லுக்!
தமிழில் பல காதல் படங்கள் வெளியாகி மக்களை ஈர்த்து வந்தது. ஆனால் இன்று வரை காதலர் தினத்திற்கே உரிய படமாக இருப்பது காதலர் தினம் படம் தான். நடிகர் குணால், சோனாலி நடிப்பில் இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1999ல் வெளியானது.
இப்படத்தின் பெரிய ஹிட்டுக்கு காரணம் படத்தில் இசையும் பாடலும் தான். ஏ ஆர் ரகுமானி இசை இப்படத்தைவிட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. அப்படி இப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சோனாலி மந்த்ரே. பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு குத்தாட்டம் போட்டதை தொடர்ந்து காதலர் தினம் படத்தில் நடித்தார்.
அதன்பின் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக 90காலக்கட்டத்தில் இருந்து வந்தார். 2002ல் கோல்டி பெல் என்பவரை திருமணம் செய்து சினிமாவிற்கு இடைவெளி கொடுத்தார்.
ரன்வீர் பெல் என்ற மகனுடன் வாழ்ந்து வந்த சோனாலி 2018ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
அதன்பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக பேசியும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பல நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார். தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் க்ளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டு மிரள வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.