திருமணமாகி நான்கே ஆண்டில் விவாகரத்து!! இரண்டாம் கல்யாணம் பற்றி கூறிய நடிகை சோனியா..

Sonia Agarwal Selvaraghavan
By Edward Jan 29, 2023 05:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 2003 செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சோனியா அகர்வால். அதன்பின் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெய்போ காலணி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

அதன்பின் கோவில், மதுர, புதுப்பேட்டை, வானம், சதுரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இடையில் இயக்குனர் செல்வராகவனை காதலித்து 2006ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

பிரிந்த சில ஆண்டுகளில் செல்வராகவன் இரண்டாம் திருமணம் செய்தும், சோனியா அகர்வால் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்து இளம் நடிகையை போல் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் பாடகர் எஸ்பி சரணுடன் திருமண கோலத்தில் எடுத்த புகைப்படம் லீக்காக இரண்டாம் கல்யாணம் செய்துவிட்டாரா சோனியா என்ற செய்தி வைரலானது. ஆனால் அது ஒரு வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறியிருந்தார் சோனியா. இந்நிலையில் தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்த செய்தியை பகிந்துள்ளார்.

அதில், எஸ்பி சரணுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து பலர் எனக்கு கால்செய்து விசாரித்தனர். நான் இல்லை என்று மறுத்துவிட்டேன். அப்படி எனக்கு பொருத்தமான நபரை சந்திக்கும் போது திருமணம் நடக்கலாம் என்றும் எத்தனை நாட்கள் நான் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை அப்படியான நபரை நான் சந்திக்கவில்லை, அவருக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.