சோனியா அகர்வாலை கண்டபடி திட்டிய செல்வராகவன்? அழுத நடிகைக்கு ஆதரவாக தனுஷ்..

Dhanush Sonia Agarwal Selvaraghavan
By Edward May 24, 2022 07:51 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் செல்வராகவன். அவர் இயக்கத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று பலர் விரும்புவார்கள். அப்படிப்பட்ட படங்களை கொடுத்து சூப்பர் ஹிட் இயக்குனராக விளங்கி வருகிறார்.

தனுஷை வைத்து பல படங்களை கொடுத்த செல்வராகவன், 7ஜி ரென்போ கலாணி படத்தின் மூலம் நடிகை சோனியா அகர்வாலை அறிமுகப்படுத்தினார். அதன்பின் தம்பி தனுஷுடன் காதல் கொண்டேன் படத்திலும் நடிக்க வைத்து நல்ல படத்தினை கொடுத்தார்.

அப்படத்தின் போது தான் செல்வராகவன் சோனியா காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். இதனை அடுத்து சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் இருவரும் நண்பர்களாக இருந்து வருவதாகவும் கூறியிருந்தார் சோனியா அகர்வால்.

விவாகரத்துக்கு பின் செல்வராகவன் இன்னொரு திருமணத்தை செய்தார். ஆனால் சோனியா அகர்வால் மார்க்கெட் இழந்து இன்னும் தனிமையில் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் செல்வராகவன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சோனியா அகர்வால்.

ஆரம்பத்தில் தனுஷ் எல்லாம் ஒரு நடிகராக என்ற எண்ணம் தோன்றியது. என் அம்மாவுக்கு அவர் மீது நம்பிக்கையே இல்லை என்றும் அதன்பின் நான் சமாதானம் செய்து நடிக்க ஆரம்பித்தேன்.

செல்வராகவன் ஷூட்டிங்கின் போது சில நேரங்களில் நடிப்பு வரவில்லை என்றால் கண்டபடி சத்தமாக திட்டிவிடுவார். இதனால் கஷ்டப்பட்ட போது தனுஷ் தான் ஆறுதல் வார்த்தைகளை கூறுவார்.

வேலை காரணமாக தான் அவர் திட்டுகிறார். எதற்கும் கவலைப்படாதீர்கள். படத்தில் நல்ல நடிப்பை வாங்குவது எப்படி என்று அவருக்கு தெரியும். அதனால் தான் இப்படி வேலை வாங்குவார் என்று கூறியுள்ளார்.