விவாகரத்தாகி 12 வருடங்கள்! செல்வராகவன் இப்படிப்பட்டவர் என கூறிய முன்னாள் மனைவி

divorce dhanush selvaraghavan soniaagarwal tamilactress
By Edward Mar 24, 2022 08:33 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் காதல் கொண்டேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சோனியா அகர்வால். இதையடுத்து கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் புதுப்பேட்டை படத்தில் மீண்டு நடிகர் தனுஷுடன் நடித்து வந்த சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன்பின் செல்வராகவன் கீதாஞ்சலியை திருமணம் செய்தார். சோனியா அகர்வால் தனிமையில் இருந்து சீரியலில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விவாகரத்து பற்றி ஓப்பனாக பேசியுள்ளார்.செல்வராகவனுன் படங்களில் நடித்த போது அவரது கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பின் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். திருமணமாகும் சமயத்தில் எப்படி சந்தோஷமாக இருந்தோமோ, அதேபோல் விவாகரத்து செய்த போது மிகுந்த மன வலியுடன் தான் பிரிந்தோம் என்று கூறியுள்ளார்.