ஹீரோ ஆனதும் காசு கொடுத்து கூட்டத்தை சேர்த்த சூரி.. கூச்சலிட்ட ரசிகர்களால் கடுப்பாகிய இசைஞானி..
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகராக கோடியில் சம்பளம் வாங்கும் அளவிற்கு பிரபலமானவர் சூரி. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த சூரி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து வந்தார்.
விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ட்ரைலர் லான்ச் நிகழ்வு நடைபெற்றது. முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இளையராஜா அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், முதல் முறை கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள சூரி இந்நிகழ்ச்சியில் யார் பேசி சூரி பெயரை சொல்லும் போதும் ரசிகர்கள் கைத்தட்டியதோடு கத்தி கூச்சலிட்டனர். மேலும், இளையராஜா பேசும் போது அவரை பேசவிடாமல் கத்தியதால் மைக்கை கொடுத்து விட்டு போய் விடுவேன் என்று கூறும் அளவிற்கு கடுப்பாகி கோபப்பட்டார்.
அதன்பின் தான் அனைவரும் அமைதியாகினர்கள். இந்நிலையில், கைத்தட்டளுக்காக சூரி தான், காசு கொடுத்து ஊரிலிருந்து வேன் மூலம் ஆட்களை வரவழைத்தள்ளார் என்று விழாவுக்கு வந்தவர்கள் முனுமுனுத்தனார். இதேபோல் சந்தனமும் ஹீரோ ஆனதும் இப்படி காசு கொடுத்து கைத்தட்டளுக்காக ஆட்களை வரவழைத்ததாக்கவும் கிசுகிசுக்கப்பட்டது.