ஒரு வேல அது உண்மையா இருக்குமோ! சிம்புவுக்கு வாழ்த்து கூறிய ரஜினி மகள்

simbu str Soundarya Rajinikanth doctorate
By Edward Jan 11, 2022 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு வயதில் இருந்தே சினிமாத்துறைக்கு தன் தந்தை டி ராஜேந்திரனால் அறிமுகமாகியவர் நடிகர் சிலம்பரசன். சமீபகாலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வந்த சிம்பு கம்பேக் ஹிட்டாக அமைந்தது மாநாடு படம்.

இதையடுத்து சில படங்களில் நடித்து வரும் சிம்புவிற்கு பிரபல வேல்ஸ் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனைக்காக டாக்டர் பட்டத்தை இன்று கொடுத்துள்ளது.

விழாவில் எடுத்த புகைப்படங்களை நடிகர் சிம்பு இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்றும் ஒருவேல அப்படி இருக்குமோ என்றும் கலாய்த்து வருகிறார்கள்.