21 வயது கங்குலி மகள் சனாவின் சம்பளம் இத்தனை லட்சமா? அதிர்ந்து போகும் ரசிகர்கள்..
கங்குலி மகள் சனா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி இந்திய அணியின் முதன்மையானவராக திகழ்ந்து தற்போது முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
தாதா என்று அனைவரால் புகழப்படும் கங்குலி நடனக்கலைஞர் டோனா என்பவரை திருமணம் செய்து சனா என்ற மகளை பெற்றெடுத்தார்.
கங்குலி மகள் சனாவிற்கு தற்போது 21 வயதாகிறது. தன்னுடைய அப்பா தொழில் பக்கம் செல்லாமல் தனக்கென ஒரு பாதையை தேர்வு செய்த சனா பெரிய எம் என் சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாராம். கடந்த 2022 முதல் PwC நிறுவனத்தில் இண்டர்னாக பணிபுரிந்துள்ளார்.
சம்பளம்
இந்நிறுவனத்தில் பயிற்சியாளர் பணிக்கு ஆண்டுக்கு ரூ 30 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். மேலும் HSBC, KPMG, Golman Sachs, Barclays, iCICI உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் சனா பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
தற்போது Deloitte நிறுவனத்தில் சனா பணிபுரியும் நிலையில், அங்கு அவருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 12 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.