Spider-Man: Brand New Day!! டாம் ஹோலண்ட் - ஜெண்டயாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Spider-Man: Brand New Day
மார்வெலின் 38வது படமாகவும் எம்சியூவின் ஸ்பைடர்மேன் சீரிஸின் 4வது படமாகவும் உருவாகி இன்று ஜூலை 30 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது Spider-Man: Brand New Day.
இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒப்படத்தில் பீட்டார் பார்க்கர்/ஸ்பைடர் மேனாக டாம் ஹோலண்ட் இறுதி வரை தன் தோள் மீது சுமந்துள்ளார்.

மார்வெல் ரசிகர்களின் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் தான் டாம் ஹோலண்ட். இப்படத்தில் அதிகமாக ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் படத்தில் பாசப் போராட்டத்தையும் இயக்குநர் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
டாம் ஹோலண்ட் - ஜெண்டயா
இந்நிலையில் படத்தை பார்த்தவர்கள் படம் எப்படி இருக்கிறது என்ற கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஸ்பைடர் மேன் ஹீரோ டாம் ஹோலண்ட், ஹீரோயின் ஜெண்டயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் டாம் ஹோலண்ட் Spider-Man: Brand New Day படத்திற்காக 20 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாக பெற்றிருக்கிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 25 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.228.25 கோடி).
அதேபோல் ஹெண்டயா Spider-Man: Brand New Day படத்திற்காக 8 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்றிருக்கிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் ரூ.273.90 கோடி) என்று கூறப்படுகிறது.