ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் 10 நாட்களில் இந்தியாவில் செய்துள்ள வசூல்..

Box office Spider-Man: Brand New Day
By Karthick Raja Aug 09, 2026 11:30 AM GMT
Report

மார்வெல் தயாரிப்பில் இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம்.

இப்படத்தில், டாம் ஹோலாண்ட், ஜென்டயா, சாடி சிங்க் ஆகியோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் 10 நாட்களில் இந்தியாவில் செய்துள்ள வசூல்.. | Spiderman Brand New Day Indian Box Office

இந்நிலையில், 10 நாட்களில் இந்தியாவில் மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எளிதாகவே இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலை தாண்டி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.