அமரன் படம் : ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகரிடன் சிவகார்த்திகேயன் நடந்து கொண்ட விதம்..
அமரன் படம்
உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியால் இயக்கப்பட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் தான் அமரன்.
படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை தூக்கியுள்ள நிலையில், அமரன் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீகுமார் தன் கேரக்டர் பற்றியும் சிவகார்த்திகேயன் பற்றியும் சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடந்து கொண்ட விதம்
அதில், அமரன் படத்தில் தான் ஒருசில காட்சிகளில் வந்தாலும் அது தனக்கு பெருமை தான். அதோடு ஒருசிலர் பழசை மறக்காமல் நம்ம பிரமிக்க வைப்பார்கள். அதில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் இருக்கும்போதே எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அந்நேரத்தில் நான் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் கூட அவர் எனக்கு மெசேஜ் செய்து என்னை பாராட்டுவார். நானும் அவரிடம் அப்படி பேசியிருக்கிறேன்.
ஆனால் பேசி சில வருடங்களாக எங்களுக்கு கேப் விழுந்தது. அமரன் படத்தில் நான் நடிக்கப்போகிறேன் என்றதும் சிவகார்த்திகேயன் முன்பு போல் நம்மிடம் பேசுவாரா? இல்லையா என்று குழப்பத்துடனும் தயக்கத்துடனும் இருந்தேன். அவர் டாப்பில் இருக்கும் ஹீரோ என்பதால் அப்படி நினைத்தேன். முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போகும் போது சிவகார்த்திகேயன், கீழே குனிந்து காலில் ஷூ லேஸ் கட்டிக்கொண்டிருந்தார்.
என்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து, அண்ணன் எப்படி இருக்கீங்க உக்காருங்க என்றார். எனக்கு அங்கு நிறைய பேர் இருந்தபோது உட்கார ஒரு மாதிரி இருந்தது. ஆனால் அண்ணே உட்காருங்க அண்ணே என்று எப்போதும் என்னிடம் உரிமையாக சொல்வது போல் பல்லை கடித்துக்கொண்டு விளையாட்டா சொன்னார்.
அதன்பின் நான் அங்கு இயல்பாக இருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த கடைசி நாள் வரைக்கும் நல்ல மரியாதை கொடுத்தார், அதற்கு காரணம் என்னிடம் சிவகார்த்திகேயன் நடந்துகொண்ட விதம் தான். ஆனால் இதுபோல எல்லோரும் நடந்து கொள்கிறார்களா என்றால் சந்தேகம் தான் என்று நடிகர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.