சமூக வலைத்தளங்கள் மூலம் ஸ்ரீலீலா இவ்வளவு சம்பாதிக்கிறாரா? அடேங்கப்பா!

Sreeleela
By Karthick Raja Jul 09, 2026 11:30 AM GMT
Report

ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீலீலா. இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஸ்ரீலீலாவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நடன காணொளிகளுக்கு அவரது ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைக்கிறது.

சமூக வலைத்தளங்கள் மூலம் ஸ்ரீலீலா இவ்வளவு சம்பாதிக்கிறாரா? அடேங்கப்பா! | Sreeleela Earning From Social Media

சமீபத்திய தகவலின்படி, நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செய்யும் ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும், ஸ்பான்ஸர் செய்யப்பட்ட பிராண்ட் விளம்பரத்திற்கும் சுமார் ரூ. 8 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாக மட்டுமே நடிகை ஸ்ரீலீலா மாதத்திற்கு ரூ. 40 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாக வர்த்தக வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் அவர் சமூக ஊடகங்கள் வழியாக மட்டுமே ஆண்டுக்கு ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள் மூலம் ஸ்ரீலீலா இவ்வளவு சம்பாதிக்கிறாரா? அடேங்கப்பா! | Sreeleela Earning From Social Media