பிரபல இளம் நடிகர் மீது காதலில் ஸ்ரீதேவி மகள்.. ஒன்றாக ஊர் சுற்றும் ஜோடி
திரையுலகில் மூத்த நடிகையாக இருந்தவர் ஸ்ரீ தேவி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என மகள்கள் உள்ளனர்.
இதில் ஜான்வி கபூர் தற்போது இந்தியளவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடித்து வருகிறார். ஜான்வி கபூரை தொடர்ந்து குஷி கபூரும் தற்போது சினிமாவில் களமிறங்கியுள்ளார்.
ஆம், சமீபத்தில் வெளிவந்த The Archies எனும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் குஷி கபூர் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்திருந்த இளம் நடிகர் வேதங் ரெய்னா என்பவருடன் குஷி கபூருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என கேள்வி கேட்டதற்கு இருவரும் பதிலளிக்க வில்லையாம். ஆனால், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார்கள் என்றும், இருவரும் நெருக்கமாக காதலித்து வருகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.