தனுஷ்-ஆ வேண்டவே வேண்டாம்!! பாலிவுட் எண்ட்ரிக்கு முட்டுக்கட்டை போட்ட நடிகை ஸ்ரீதேவி..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று டாப் இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், மேலும் சில படங்களை வரிசைக்கட்டி வைத்துள்ளார். தனுஷின் சினிமா வாழ்க்கையில் ஆரம்ப படமாக அமைந்தது துள்ளுவதோ இளமை.
அப்படத்தினை அடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படத்தின் போது இவர் எல்லாம் ஒரு நடிகரா என்று தனுஷ் உடலை பற்றி கிண்டல் செய்து அசிங்கப்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியும் வருகிறார்கள்.
எனினும் காதல் கொண்டேன் படம் வெளியாகி மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றார் தனுஷ். அப்போது தனுஷின் காதல் கொண்டேன் படத்தினை தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் மனைவியுடன் சென்னைக்கு வந்து பார்த்துள்ளார். படம் அவருக்கு பிடித்து போக இந்தியில் ரீமேக் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
இந்தியில் செல்வராகவனே இயக்கவும் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க போனி கபூர் விரும்பியிருக்கிறார். அப்போது படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் வாங்கி நாளைக்கே ஒப்பந்தம் செய்யலாம் என்று கூறியிருக்கிறார் போனி கபூர். அப்போது அவர் பக்கம் இருந்து ஸ்ரீதேவி, என்னது தனுஷை வைத்து இந்தி ரீமேகை எடுக்க போகிறீர்களா? உங்களுக்கு என்னதான் ஆச்சு, எப்படி தனுஷ் இந்தியில் செட்டாகுவார் என்று ஷாக்கான ரியாக்ஷனோடு கூறியிருக்கிறார்.
ஆனால் போனி கபூர், பீகார் பகுதியில் இருந்து ஒரு பையன் படிக்க வருவது போல் காட்டிவிட்டால், தனுஷுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் தனுஷை தவிர வேறு யாரையும் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். அடுத்த நாளே தனுஷ், செல்வராகவனை அழைத்து அட்வான்ஸ் பணமும் கொடுத்தாராம் போனி கபூர். ஆனால் அப்படம் ஏதோ ஒருசில காரணத்தால் படம் எடுக்கமுடியாமல் போனதாம்.
ஆனால் காதல் கொண்டேன் படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் இன்றுவரை போனி கபூரிடமே இருக்கிறதாம். அப்போது இந்த படம் வெளியாகியிருந்தால், தனுஷ் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து இருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.