விஜய் ஓகே!! சூப்பர் ஸ்டார் கேட்டும் வேண்டவே வேண்டாம்-ன்னு ஒதுக்கிய பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து மிகப்பெரிய சாம்ராஜியத்தை அனைத்து வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யை வைத்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர் ஆவலோடு காத்திருந்து வருவார்கள். அதேபோல் நடிகைகளும் அவருடன் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். அப்படி முக்கிய ரோலில் விஜய்க்கு ஓகே சொல்லிய நடிகையை பற்றி விஜய்க்கு பிஆர்ஓ-வாக பணியாற்றி தயாரிப்பாளரான பிடி. செல்வகுமார் பகிர்ந்துள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் துபாய் ஓட்டலில் மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் புலி படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அப்படத்திற்கு முன் எந்த படத்தில் நடிக்கபோவதில்லை என்று கூறி தன்னை தேடி வருபவர்களிடம் கூறி அனுப்பி வைத்து வந்தார். அப்படி ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு கூட, ஸ்ரீதேவியை அவரே சென்று கூப்பிட்டு கால்ஷீட் கேட்டுள்ளார்.
ஆனால் ரஜினிகாந்த் கூறியும் நான் நடிக்க மாட்டேன் என்ற குறிக்கோளுடன் இருந்து வந்துள்ளார். அப்படியிருக்கையில் மும்பைக்கு சென்று நடிகை ஸ்ரீதேவியிடம் புலி படத்தில் நடிக்க பிடி. செல்வகுமார் சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்து, ஸ்ரீதேவியை பற்றி புகழ்ந்தும் உங்களின் தீவிர ரசிகர் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் விஜய் படத்தில் நடிக்க சில கண்டீசன்கள் போட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் ஸ்ரீதேவி என்று அவர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் படத்திற்கே ஓகே கூறாத ஸ்ரீதேவி, விஜய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது தளபதி ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று கருத்துக்களை அந்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து வருகிறார்கள்.