ஓவர் பெர்ஃபார்ம் பண்ண ரஜினியை பைத்தியம்னு சொன்ன பிரபல இயக்குநர்!! உண்மையை உடைத்த நடிகர்
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த், மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளியாகவும் 'L2 எம்புரான்' படத்தின் டிரைலரை பார்த்து வாழ்த்து கூறியிருந்தார்.
இளமை ஊஞ்சலாடுகிறது
இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் அளித்த பேட்டியொன்றில், ரஜினிகாந்தும் இயக்குநர் சி வி ஸ்ரீதரும் இணைந்து இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தில் பணியாற்றினர். அப்போது ரஜினி செய்ததை பார்த்து இயக்குநர் ஸ்ரீதர், என்ன பைத்தியக்காரத்தனமா செஞ்சிட்டு இருக்கார் என்று கூறியிருக்கிறார்.
மூன்று படிக்கட்டுகளில் மேலே ஏறிவிட்டு திருப்பி, கீழே இறங்கி வருவார். அதை பார்த்துவிட்டு இயக்குநரோ, ஒன்னு மேல் படிக்கட்டுல நின்னு ஃபோன் பேச சொல்லு இல்ல கீழ் படிக்கட்டுல நின்று பேச சொல்லு, ஏன் இப்படி ஏறி இறங்குறார் என்று அவரது உதவி இயக்குநரிடம் கேட்டார். அதையெல்லாம் பார்த்துத்தான் ரஜினி செய்வது பைத்தியம் போல் இருக்கிறது என்று ஸ்ரீதர் கூறினார் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
