ரஜினிக்கு அம்மா, கமலுடன் ரொமான்ஸ்? ஸ்ரீவித்யா வாழ்க்கையை சீரழித்த பிரபலங்கள்..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீவித்யா. கமலுக்கு ஜோடியாகவும், ரஜினிக்கும் அம்மாவாகவும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
அறிமுக சினிமா வாழ்க்கை
அஜித், விஜய், சூர்யா போன்றவர்கள் ஆரம்பித்த சினிமாகாலக்கட்டத்தில் கூட ஸ்ரீவித்யா நல்ல வரவேற்பு பெற்றார். பரத நாட்டிய கலைஞராக ஆரம்பித்த வாழ்க்கையில், எம்ஜிஆருடன் நடிக்க வேண்டும் என்ற கனவை நிறவேற்றமுடியாமல் போனது. பின் ஜெய்சங்கருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்து தமிழ், மலையாள மொழிகளில் கொடிக்கட்டி பறந்தார்.

எம்ஜிஆருடன் கனவு தகர்ந்தது
நடிகை ஸ்ரீவித்யாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறினால் அது கமல் ஹாசன் தான். எந்த நேரத்திலும் அவருக்கு உதவி கரம் நீட்டினவரும் கமல் ஹாசன் தான். ஆனால் இதை பத்திரிக்கையாளர்கள் தவறாக சித்தரித்து வதந்திகளை பரப்பி வந்தனர்.

திருமணமும் விவாகரத்தும்
ஸ்ரீவித்யா வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்தது என்றால் அது திருமணம் தான். ஜார்ஜ் தாமஸ் என்பவருடன் நட்பாக பழகி பின் காதலியாகவும் அதன்பின் திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு, சினிமாவுக்கு ஓய்வு கொடுத்த ஸ்ரீவித்யா, கணவரின் தொழில் பாதிப்பால் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின், தான் சம்பாதித்த காசை தவறான முறையில் பயன்படுத்தி ஏமாற்றினாராம் ஜார்ஜ். இதனால் அவரை விவாகர்த்து செய்ய முடிவெடுத்து பிரிந்துவிட்டார்.
இயக்குனர் பரதன்
அதன்பின் கமல்ஹாசன் உதவியுடன் படங்களில் நடிக்க ஆரம்பித்த ஸ்ரீவித்யா மறைந்த நடிகை லலிதாவின் கணவரான இயக்குனர் பரதனுடன் காதலில் இருந்ததாகவும் தன்னை சுற்றியுள்ள ஆண்கள் யாரும் நிலைக்கவில்லை என்ற சோகத்தில் ஸ்ரீவித்யா வாழ்ந்து வந்தார்.
கேபி. கணேஷ் குமார்
அதன் பின் அவர் வாழ்க்கையில் வந்த கேபி கணேஷ் குமார். 8 வயது இளயவராக ஸ்ரீவித்யா வாழ்க்கையில் வந்து ஆதரவு காட்டியுள்ளார். அவரும் போகபோக ஸ்ரீவித்யா ஏமாற்றியிருக்கிறார்.
பின் உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த போது தன் சொத்து நிலைக்க ஒரு நடன பள்ளியை ஆரம்பித்து டிரைஸ்ட் மூலம் கேபி கணேஷ்குமாரை வைத்து ஆரம்பித்தார். அந்த பொறுப்பை கணேஷ்குமாரையே பார்க்கவும் வைத்தார்.
இதன்பின் ஸ்ரீவித்யா உடல் நிலைக்குறைவால் 2008ல் மரணமடைந்தார். அவர் இறப்புக்கு பின் அந்த நிறுவனத்தை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்று ஸ்ரீவித்யா அண்ணன் கேபி கணேஷ்குமார் மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.