எந்த வயசில் முதன் முறையாக நீலப் படம் பார்த்தீங்க?..CWC -ஸ்ருஷ்டி டாங்கே கொடுத்த ஷாக்கிங் பதில்!
இயக்குநர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் நடிகர் அஷ்வின் நடிப்பில் வெளியான மேகா என்ற படத்தின் மூலமாக கோலிவுட்ட்டில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே.
இதைத்தொடர்ந்து டார்லிங், தர்மதுரை,கத்துக்குட்டி,வில் அம்பு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் தான் புகழ் உச்சிக்கு சென்றார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ருஷ்டி டாங்கே இடம் தொகுப்பாளர், எந்த வயசில் முதன் முறையாக நீலப் படம் பார்த்தீங்க என்று கேட்டார்.
இந்த கேள்வியால் கோபமடைந்த ஸ்ருஷ்டி டாங்கே, நாம் நேர்காணலை இதோடு முடித்துக் கொள்ளலாம். நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீர்கள்? என்று சொல்லி பேட்டி பாதியில் இருந்து வெளியே சென்றார்.
அதன் பின்னர் தான் தெரிய வந்தது இயக்குனரும், ஸ்ருஷ்டி டாங்கே சேர்ந்து தொகுப்பாளரை பிராங்க் செய்திருக்கிறார்கள் என்று. ஸ்ருஷ்டி டாங்கேவின் கோபத்தை பார்த்த தொகுப்பாளர் பயந்து போய்விட்டார்.