ஆஸ்காருக்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் ராஜமெளலி!
S. S. Rajamouli
By Parthiban.A
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்த அந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அரசு இந்த படத்தை நிராகரித்துவிட்டு ஒரு குஜராத்தி படத்தை ஆஸ்காருக்கு அனுப்பியது. இந்நிலையில் ராஜமௌலி தனியாக ஆர்ஆர்ஆர் படத்தை ஆஸ்காருக்கு அனுப்பி இருக்கிறார்.
தற்போது அமெரிக்காவில் RRR படத்தின் ஸ்பெஷல் காட்சிகள் போடப்பட்டு வருகிறது. அதில் ராஜமௌலியே நேரில் சென்று பலருடன் கலந்துரையாடுகிறார்.
இப்படி ஆஸ்காருக்காக ராஜமௌலி தற்போது வரை 50 கோடி ருபாய் வரை செலவு செய்து இருக்கிறாராம். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.