அம்பானி வீட்டு திருமணத்துக்கு வர நடிகர்களுக்கு பணம் கொடுத்தார்களா? வெளிப்படையாக பேசிய பாலிவுட் நடிகை..
முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரிடம் மகன் ஆனந்த் அம்பானி - மெர்ச்சன்ட் திருமணம் கடந்த ஜூலை மாதம் பிரம்மாண்ட முறையில் மும்பையில் நடைபெற்றது. பல நாட்கள் கொண்டாட்டத்திற்கு பின் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் பல நிகழ்ச்சிகளில் முன்னின்று கலந்து கொண்டனர். இத்தனை நடிகர்களும் அம்பானி வீட்டுத்திருமணத்தில் முகாமிட்டிருந்தனர். பாலிவுட் நடிகர்களுக்கு அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ள பணம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து திருமணத்தில் மணமக்களுடன் நெருக்கமாக இருந்த நடிகை அனன்யா பாண்டேவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஆனந்த் அம்பானியும் ராதிகாவும் என் நண்பர்கள் என்பதாலேயே திருமணத்திற்கு சென்றேன். ஏன் மக்கள் இப்படி நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
என் நண்பர்கள் திருமணத்தில் நான் கலந்து கொண்டு நிச்சயமாக நடனமாடுவேன். அங்கே என்ன நடந்தாலும் எப்போதும் ஆனந்தும் ராதிகாவும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக் கொண்டனர்.

அவர்களுக்கு பின்னால் வயலின் வாசிப்பதைப் போல இருக்கும். என் வாழ்க்கையிலும் அப்படி ஒன்று நடக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சுற்றி என்ன நடந்தாலும் அந்த ஒருவருடன் மற்றும் ஒரு இணைப்பு இருக்கும் என்று ஆனந்த் அம்பானி - ராதிகாவின் காதலை மெய்சிலித்து பேசியிருக்கிறார் நடிகை அனன்யா பாண்டே.