காமெடிக்காகவே 1000 படங்கள்! வடிவேலு கவுண்டமணியையே மிஞ்சிய நடிகர்!

tollywood brahmanandam
By Edward Dec 15, 2021 12:05 PM GMT
Report

சினிமாவை பொருத்த வரை வயது பார்க்காமல் கடின உழைப்பு, தன்னம்பிக்கை கொண்டிருந்து படங்களில் எந்தவொரு கதாபாத்திரத்தையும் நடித்து கொடுக்கலாம் என்ற மனநிலையில் இருப்பவர் தான் மிக உச்சத்தை அடைய முடியும். அப்படி, சினிமாவை உயிர் மூச்சாக நினைத்து நடித்து, பின் அதற்கான புகழும் பெருமையையும் சேர்ப்பவர்கள் லிஜெண்ட்டரி ஆக்டர்ஸ் என்று கூறுவார்கள்.

அந்த வரிசையில் தமிழில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு என பல ஜாம்பவான்கள் இருக்கும் மத்தியில் தெலுங்கு சினிமாவின் காமெடி ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் காமெடி நடிகர் பிரம்மானந்தம். ஆரம்பகாலத்தில் இருந்து கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு காலத்தில் புகழின் உச்சத்திற்கு சென்ற இவர் ஒரு படத்திற்காக 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார்.

இவர் சினிமாவில் படைத்த சாதனைகள் மற்றும் வாங்கிய விருதுகள் என்று அடுக்கி கொண்டே போகலாம். இவர் எந்த அளவிற்கு புகழின் உச்சத்திற்கு சென்றாறோ அதே அளவிற்கு இவருடைய சம்பளமும் உச்சத்திற்கு சென்றது. கிட்டத்தட்ட ஒரு நாள் நடிப்பதற்கு 1 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது 65 வயதை தாண்டியும் ஒரு படத்திற்காக 2 கோடி அளவில் சம்பளமாக பெருகிறாராம். தமிழில் மரகத நாணயம், தானா சேர்ந்த கூட்டம் என ஒருசில காட்சிகளுக்கு நடித்து கொடுத்திருகிறார் பிரம்மானந்தம்.