மாஸ்டர் அண்ணாத்தலாம் ஓரமா போங்க! இதுமட்டும் தான் நல்லா ஓடுச்சு..

master karnan annaatthe jaibhim sarpattaparamparai tamilcinema2021
By Edward Dec 18, 2021 08:55 AM GMT
Report

சினிமாவை பொருத்தவரை தற்போதைய படங்கள் எத்தனை கோடி வசூல் பெற்றதை வைத்து படத்தின் வெற்றியை நிர்ணயம் செய்து வருகிறார்கள். அப்படியில்லாமல் கதைக்காகவே படத்தினை பார்த்து விமர்சனம் செய்து வெற்றியா? தோல்வியா? என்று பார்க்கும் காலம் மாறிவிட்டது.

மாஸ் நடிகர்கள் படங்கள் வசூலுக்காகவே ஓடும் ஆனால், கடின உழைப்போடு எடுத்த படங்கள் தான் மக்கள் மனதை கவரும். அந்தவகையில் இந்த ஆண்டு மக்கள் மனதை ஈர்த்து கதைக்காகவே ஓடிய படங்கள் ஒருசில தான் இருந்துள்ளது.

அதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு விமர்சனம் ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது சூர்யாவின் ஜெய் பீம் படம். இதையடுத்து நல்ல கருத்தை கதையையும் சுமுகமாக கூறியது, மண்டேலா, கர்ணன், க/பே ரணசிங்கம், கசட தபற, கயமை கடக்க, கேர் ஆப் காதல், திட்டம் இரண்டு, ஏலே, லிப்ட், சார்பட்டா பரம்பரை, டாக்டர் உள்ளிட்ட சில படங்களே வெற்றியாக அமைந்துள்ளது.