4 வருட விவாகரத்துக்கு பின் 2 ஆம் திருமணம்! சுசித்ராவின் முன்னாள் கணவர்
பெரும்பாலான படங்களில் அமெரிக்க மாப்பிள்ளை கதாபாத்திரத்திற்கென்றே பொருந்துபவர்கள் தமிழ் சினிமாவில் ஒருசிலர் இருக்கிறார்கள். அப்படி பிரபலமானவர் தான் நடிகர் கார்த்திக் குமார்.
நடிகர் மேடை காமெடியனாக இருந்து வந்த அவர் அலைப்பாயுதே, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், தெய்வத்திருமகள், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தும் வந்தவர். பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்ட கார்த்திக் சுச்சி லீக்ஸால் பல இன்னல்களை அவரால் சந்தித்து வந்தார்.
இதனால் கடந்த 2017ல் சுசித்ராவை விவாகரத்து செய்து தனியாக இருந்து வந்தார். மேடை நாடக காமெடியனாக இருந்து வந்த அவர் தற்போது நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நண்பர்கள் முன்னிலையில் ரகசியமாக இரவு பார்ட்டி வைத்து திருமணத்தை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.