கோபிநாத் CM-ஆக வேண்டும்!! நாய்கள் விஷயத்தில் பாடகி சுசித்ரா ரியாக்ஷன்..
நீயா நானா
தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட்டில் தெரு நாய்கள் அகற்ற்ப்பட வேண்டும் - ஆதரிப்பவர்கள் மற்றும் அதை எதிர்ப்பவர்களை வைத்து விவாதம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நாய்களுக்கு ஆதரவாக பேசிய நடிகை அம்மு, படவா கோபி உள்ளிட்ட பலரும் விமர்சனத்திற்குள்ளாகினர். இதனையடுத்து நாய்க்கு சப்போர்ட் செய்து பேசியவர்களை பாடகி சின்மயி மற்றும் பனிமலர் பன்னிர்செல்வம் பளீச் பதிலடி கொடுத்துள்ளனர்.
பனிமலர் பன்னிர்செல்வம்
பனிமலர் பேசுகையில், தெரு நாய்களைவிட இந்த டாக் லவ்வர்ஸ் தான் ரொம்ப ஆபத்தானவர்கள் என்பதை நீயா நானா நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது.
தெருநாய்கள் மீது அக்கறை கொண்டவர்கள், அதன்மீது அலர்ஜி, பயம் கொண்டவர்களை கூட டாக் லவ்வர்ஸ் என உட்கார்ந்துக்கொண்டு பேசியவர்களின் பேச்சைக்கேட்டால் டாக் ஹேட்டர்ஸ் ஆக மாறிவிடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
பாடகி சுசித்ரா
மேலும் பாடகி சுசித்ரா பேசுகையில், தெரு நாய்கள் தொல்லை பெரிய பிரச்சனையாக மாரிவிட்டது. அரசாங்கமே முதல் முறையாக உருப்படியான ஒரு விஷயத்தை செய்ய முன்வந்தால் இந்த டாக் லவ்வர்ஸ் மனுஷ விரோதிங்களா இருக்காங்க.
இவங்களையும் ஒரு சாக்கு மூட்டையில போட்டு மார்ஸ்ல தூக்கிப்போட்டுடணும் என்று கூறியிருக்கிறார். வெறி நாய்கள் தொடர்பான நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவிக்கு நான் சப்போர்ட் என்றும் மனிதர்கள் தான் முக்கியம் என்று பேசிய நீயா நானா கோபிநாத் தனிக்கட்சி தொடங்கி தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வேண்டும் என்றும் சுசித்ரா பேசியுள்ளார்.