சுஹாசினியின் அக்கா அழகில் மயங்கிய ரஜினி.. கமல் பெயரை கேட்டு தெறித்து ஓடிய சம்பவம்!
நடிகர் உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசனின் மகள் தான் நடிகை சுஹாசினி. இவர் 80, 90 களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுஹாசினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து யாருக்கும் தெரியாத விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என் அக்கா கல்லூரியில் படித்து கொண்டு இருந்தார். அவர் மிகவும் அழகாக இருப்பார். நான் சிறுவயதாக இருக்கும் போது என்னுடைய அக்காவுடன் வெளிய சென்று கொண்டு இருந்தேன்.
அப்போது ரஜினி காரில் வந்து கொண்டு இருந்தார். எங்களை பார்த்து விட்டு வண்டியை நிறுத்தி , 'லிப்ட் வேணுமா லேடீஸ்' என்று கேட்டார். அதற்கு, "நான் கமலின் சித்தப்பா மகள்" என்று சொன்னேன். இதன் பின் ரஜினி உடனடியாக அங்கு இருந்து சென்றுவிட்டார் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.