மனோபாலா இறுதி சடங்குக்கு வராத கமல்!! இதுதான் உண்மை காரணம்..
தமிழ் சினிமாவில் 20 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இயக்குனராக திகழ்ந்தவர் மனோபாலா. பாரதிராஜாவிடம் பணியாற்றி அதன்பின் இயக்குனராக மாறிய மனோபாலா, நடிப்பிலும் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோபாலா, லியோ, இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்துள்ளார்.
திடீரென உடல்நலக்குறைவால் சமீபத்தில் அவர் உயிரிழந்தது மிகப்பெரிய சோகத்தை சினிமாத்துறைக்கு கொடுத்தது. அவரது இறப்பிற்கு பல இரங்கள் தெரிவித்தும் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தியும் வந்தனர். ஆனால் பாரதிராஜாவிடம் மனோபாலாவை சேர்த்து வைத்த கமல் ஹாசன் மற்றும் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கு காரணம் என்ன என்று நடிகை சுஹாசினி பேசிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. மனோபாலா மரணத்திற்கு முன் நடிகை சுஹாசினி ஒரு பேட்டியொன்றில் மனோபாலா மற்றும் கமல் ஹாசன் உடனான தொடர்பு பற்றி பேசியிருக்கிறார். அதில், மனோபாலாவை திரைத்துறைக்கு கொண்டு வந்தது கமல் ஹாசன் தான்.
என்னிடம் மனோபாலா வந்து உன் சித்தப்பா உலகத்திடமே பேசுகிறார். ஆனால் என்னிடம் பேச மறுக்கிறார் என்று தெரிவித்தார். ஏனென்றால் அவர் ஏதாவது வாய் விட்டிருப்பார், ஆனால் இப்போது பேசிப்பார்கள் என்று நினைக்கிறேன் என்றும் எங்கள் நிறுவனத்தின் படத்தை கூட அதெல்லம் ஒரு படமா என்று விமர்சிப்பார் மனோபாலா.
அதனால் கோபித்துக்கொண்டனர் என்று தெரிவித்துள்ளார். அப்போது சுஹாசினி சொன்னது போல் கமல் ஹாசன் - மனோபாலாவுக்கு இடையில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்கும் என்றும் அதனால் தான் இறுதிச்சடங்கிற்கு கமல் வரவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.