பிரமோஷனுக்காக என்ன வேணாலும் பேசலாமா? கேவலமாக நடந்து கொண்ட விக்ரம், சுஹாசினி..

Vikram Suhasini Ponniyin Selvan: I Mani Ratnam
By Edward Sep 29, 2022 06:05 AM GMT
Report

சினிமாவில் நடக்கும் பல விசயங்களை யூடியூப் மூலம் ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்து வருவது வழக்கம். அப்படி பயில்வான் ரங்கநாதனை போன்று பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி மற்றும் அந்தணன் யூடியூப் மூலம் பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில் நாளை வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை பற்றி படுகேவலமாக விமர்சித்து பேசியிருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னம் மனைவி நடிகை சுஹாசினி பொன்னியின் செல்வன் படம் ஆந்திரா பகுதிகளில் தான் அதிக நாட்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. தமிழகத்தில் ஒருசில இடம் தான் எடுக்கப்பட்டது என்று முகம் சுளித்து பேசியிருந்தார்.

இதனால் இது உங்களின் படம் என்று சர்ச்சையாக பேசினார். மெலும் விக்ரம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட இந்திய படம் தென்னிந்திய படம் என்று கூறுவதைவிட பொன்னியின் செல்வன் இந்தியாவின் படம் என்று கூறியது பெரிய விமர்சனத்தில் சிக்கியது.

இதுகுறித்து அந்தணன் சுஹாசினி மற்றும் விக்ரம் தமிழ் பெருமையை அவமானப்படுத்தியதாக கொந்தளித்து விமர்சித்து பேசியுள்ளார். மேலும் பிரமோஷன் என்ற பெயரில் படத்தையே கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்று முகம் சுளித்து பேசியுள்ளார்.