கடனாளியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு உதவ முன்வந்த சன் பிக்சர்ஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் திரைபடங்கள் தொடர்ந்து உலகளவில் ரூ. 100 கோடியளவில் வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது.
அதன்படி கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் என இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தின் மூலம் பல கோடி ரூபாய் கடன் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே இது குறித்து தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சிவகார்த்திகேயனை தொடர்ப்பு கொண்டு அவரின் கடனை மொத்தமாக ஏற்றுக்கொள்ள கேட்டுள்ளார்களாம்.
மேலும் அதற்கு சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படங்கள் தொடர்ந்து அவர்களின் நிறுவனத்திற்கு கால் ஷுட் தரவேண்டும் எனவும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படத்திற்கு டேட் கொடுக்காமல் அவரின் இரண்டு திரைப்படங்களுக்கு மட்டுமே டேட் கொடுத்துள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.