ரஜினியை வைத்து சிவகார்த்திகேயனை பழிவாங்கும் சன் பிக்சர்ஸ்.. காரணம் என்ன

Rajinikanth Sivakarthikeyan
By Kathick May 06, 2023 04:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மாவீரன். இப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.

சரியாக சிவகார்த்திகேயன் பட அறிவிப்பு வெளிவந்த ஒரே வாரத்தில் ஜெயிலர் படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இதனால் ரஜினியுடன் மோதவேண்டாம் என நினைந்து தன்னுடைய மாவீரன் படத்திற்கு ஜூலை 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டார் சிவா.

எதற்காக சிவகார்த்திகேயனின் படத்துடன் ரஜினி படத்தை மோதவைக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்துள்ளார். அப்படத்தை முத்தையா இயக்க போகிறார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிவாவிடம் கூறியுள்ளனர்.

ஆனாலும் படத்தின் கதை கேட்காமல் நிராகரித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் இறுதியில் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என கூறப்படுகிறது. இந்த விஷயத்தினால் சிவகார்த்திகேயனை பழிவாங்க சன் பிக்சர்ஸ் இப்படி செய்துள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.