கயல் சீரியல் நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா!! அதுவும் ஹீரோக்களைவிட அதிகமாம்..
Sun TV
Sanjeev Karthick
Tamil TV Serials
Tamil Actors
Tamil Actress
By Edward
கயல் சீரியல்
சன் டிவியில் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று டிஆர்பியின் டாப் இடத்தில் இருக்கும். அப்படி மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கயல்.
கடந்த 4 ஆண்டுகளாக நடிகை சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்து வரும் கயல் சீரியலில் நடிகர் சஞ்சீவ் கதாநாயனாக நடித்து வருகிறார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் கயல் சீரியல் TRP-யில் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து பெற்று வந்த நிலையில் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
சம்பள விவரம்
- கயல் சீரியலில் அன்பு ரோலில் நடித்து வரும் நடிகர் ஜீவா ராஜேந்திரனும், நடிகை சுபகீதாவும் ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்களாம்.
- இதேபோல் ஷாலினி ரோலில் நடித்து வரும் நடிகை சத்யபிரியாவுக்கும் ஆறுமுகம் ரோலில் நடித்து வரும் நடிகர் செபஸ்டியனுக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதாம்.
- விக்னேஷ் ரோலில் நடித்து வரும் நடிகர் கோபிக்கும், அவரது மனைவி தேவி ரோலில் நடிக்கும் நடிகை நிலாவுக்கு ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
- அதேபோல், காமாட்சி, ராஜலட்சுமி, சிவசங்கரி மற்றும் மாலதி ரோல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
- மேலும் தர்மலிங்கம் கதாபாத்திரத்தில் நடிக்கும் முத்துராமன், வடி ரோலில் நடிக்கும் நடிகை சுமங்கலி, மூர்த்தி ரோலில் நடிக்கும் நடிகர் ஐயப்பன் உள்ளிட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதாம்.
- இவர்களைவிட கயல் சீரியலில் நாயகனாக எழில் ரோலில் நடித்து வரும் நடிகர் சஞ்சீவ் ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.
- அதேபோல் கதாநாயகி கயல் ரோலுக்கு நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறாராம்.
நாயகனை விட கதாநாயக்கு கயல் சீரியலில் அப்படியொரு முக்கியத்துவம் என்று சைத்ரா ரெட்டியின் சம்பளம் வழியாக தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.