விளம்பரத்திற்காக இப்படியா!! நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சி..

Sunaina Gossip Today Tamil Actress
By Edward May 22, 2023 03:30 PM GMT
Report

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சுனைனா. அப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சுனைனா போதிய வரவேற்பை பெறாமல் இருந்து வந்தார்.

அதன்பின் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் கவன செலுத்தி வரும் சுனைனா சில தினங்களுக்கு முன் கடத்தப்பட்டதாகவும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து சுனைனா தங்கியிருந்த வீட்டு மற்றும் சென்ற இடங்களுக்கு சென்று போலிசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் அந்த வீடியோ நடிகை சுனைனா நடித்து வெளியாகவுள்ள ஒரு படத்தின் விளம்பரத்திற்காக அந்த வீடியோவை படக்குழுவினரே வெளியிட்டுள்ளனர்.

இதனால் போலிசார் 2 நாட்களாக சல்லடை போட்டு தேடியதற்கு அதிருப்தியாக மாறியிருக்கிறது. பட பிரமோஷனுக்காக இப்படியா பண்ணுவாங்க என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.