சுந்தர் சி-க்கு 10 வருடமாக ஏமாற்றி ஆப்பு வைத்து வரும் ஹீரோ.. கிடப்பில் கெடக்கும் மதகஜராஜா.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சுந்தர் சி, தற்போது காஃபி வித் காதல் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
காமெடி கலந்த ஹரர் படம், அடல்ட் உள்ளிட்ட படங்களையும் இயக்கி வரும் சுந்தர் சி இயக்கத்தில் 11 வருடத்திற்கு முன் 2013 ல் துவங்கப்பட்ட படம் மதகஜராஜா.
விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பல நடிக்கவிருந்த இப்படம் படப்பிடிப்பு பாதி முடிந்து சில காரணங்களால் கிடப்பில் இருக்கிறது. தற்போது இப்படத்தினை மீண்டும் இயக்க புது பிளான் போட்டுள்ளார் சுந்தர் சி.
ஆனால் விஷால் தன்னுடைய பாதையை மாற்றியும் சந்தானல் ஹீரோ ரோலிலும் நடித்து கவனம் செலுத்தி வருகிறார்கள். விஷால் பல பிரச்சனைகளில் தயாரிப்பாளர்களிடம் சிக்கி பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார்.
படத்தை எப்படியாவது இயக்க மும்முரமாக இருக்கிறாராம் இயக்குனர். இப்படி இரு நடிகர்கள் ஏமாற்றியதால் மதகஜராஜா படத்தினை எப்படியாவது எடுத்து ஓடிடியிலாவது வெளியிட வேண்டும் என்று குறிக்கோளாக இருக்கிறாராம்.